பொய் தகவல்களை உருவாக்குவதில் அமெரிக்காவின் மற்றொரு ரகசியம்
2022-09-29 16:32:39

மேற்கத்திய சமூக வலைதளத்தில் பேரழகியின் படம் வைத்து கொண்ட கணக்கு ஒன்று இருந்தது. ஆனால், உண்மையில் போர்ட்டோ ரிக்கோவைச் சேர்ந்த நடிகை ஒருவரின் புகைப்படத்தால் உருவாக்கப்பட்ட போலிப் படம் அதுவாகும்.  கணக்கை இயக்குபவர், அமெரிக்க ராணுவத்துடன் தொடர்பு இருக்கலாம். மறைந்திருக்கும் செல்வாக்கு நடவடிக்கை என்ற அமெரிக்காவின் செயல்திட்டத்தின் பல கணக்குகளில் அது ஒன்றாகும்.

கடந்த 5 ஆண்டுகளில் இந்த செயல்திட்டத்தின் மூலம் 100க்கும் அதிகமான போலிக் கணக்குகள் உருவாக்கப்பட்டன. பல சமூக வலைதளங்களில் பொய் தகவல்களைப் வெளியிட்டு, மேற்கத்தியத்திற்கு ஆதரவான கருத்துக்களை பரப்புரை செய்துள்ளது. மேலும், சீனா, ரஷியா, ஈரான் உள்ளிட்ட பல நாடுகளைப் பற்றி அவதூறு பரப்பியுள்ளது. இது குறித்து வாஷிங்டன் போஸ்ட் செய்தித்தாள் அண்மையில் குறிப்பிடுகையில், அமெரிக்க தேசிய பாதுகாப்பு அமைச்சகம் நிர்ப்பந்தத்துக்கு அடிபணிந்து, அமெரிக்க ராணுவம் ரகசிய தகவல் போர் தொடுக்கும் வழிமுறையை பரிசோனை செய்யும்.

பொய் தகவல்களை உருவாக்கிப் பரப்புவது, அமெரிக்கா பிற நாடுகளின் ஆட்சியைக் கவிழ்க்கச் செய்யும் முக்கிய வழிமுறையாகும். இதனிடையில், 2011ஆம் ஆண்டு ஏற்பட்ட 'அரபு வசந்தம்' என்று கூறப்பட்ட எழுச்சி, ஒரு எடுத்துக்காட்டு. அப்போது, அமெரிக்கா அதிகளவில் பொய் தகவல்களைப் பரப்பி, “வண்ணப் புரட்சியை ஏற்படுத்தியது.