சீன-அர்ஜென்டீனா ஒத்துழைப்பின் முன்னேற்றங்கள்
2022-09-30 11:28:09

இவ்வாண்டு சீன-அர்ஜென்டீனா தூதாண்மையுறவு நிறுவப்பட்ட 50ஆவது ஆண்டு நிறைவாகும். கடந்த 50 ஆண்டுகளில் இவ்விரு நாடுகள், தொலைத்தூர நண்பர்கள் முதல், பன்முக நெடுநோக்கு கூட்டாளியாக மாறியுள்ளன. இது, இரு நாட்டு மக்களுக்கு உண்மையான நலன்களை விளைவித்ததோடு, இரு தரப்புகளுக்கிடையில் பரஸ்பர நலன் மற்றும் கூட்டு வெற்றி நனவாக்கப்படுவதையும் எடுத்துக்காட்டியது.

தற்போது சீனாவும் அர்ஜென்டீனாவும், பொருளாதாரம், நோய் பாதிப்பிலிருந்து மீட்சி அடைந்து, மக்களுக்கு நன்மைகளைக் கொண்டு வரும் முக்கிய கடமையை எதிர்நோக்கி வருகின்றன. ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்தின் செயலாக்கத்துடன், இரு நாடுகள் ஒத்துழைப்பின் அடிப்படையை வலுப்படுத்தி, சவால்களைச் சமாளிக்க மேலதிக உந்து சக்தியை ஊட்டி வருகின்றன. எடுத்துக்காட்டாக, உலகின் தெற்கில் மிக தொலைவிலுள்ள நீர்மின் நிலையத்தை இரு நாடுகள் கூட்டாக கட்டியமைத்து வருகிறது. இத்திட்டப்பணி நிறைவடைந்த பின், ஆண்டுக்கான மின்சார உற்பத்தி திறன் 495 கோடி கிலோவாட் மணி எட்டும். இதன் மூலம் ஆண்டுதோறும் 110 கோடி டாலர் எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதி செலவு சிக்கனப்படுத்தப்படும்.

கடந்த 50 ஆண்டுகளில் சீன-அர்ஜென்டீனா உறவின் பன்முக வளர்ச்சி, உயிராற்றல் மிக்க சீன-லத்தீன் அமெரிக்க உறவின் சிறிய பதிவாகும். இவ்வாண்டின் முதல் 7 திங்களில் லத்தீன் அமெரிக்காவுக்கு சீனாவின் ஏற்றுமதி தொகை 94 ஆயிரத்து 776 கோடி யுவானை எட்டி, கடந்த ஆண்டில் இருந்ததை விட 21.4 விழுக்காடு அதிகம். இறக்குமதி தொகை 88 ஆயிரத்து 542 கோடி யுவானை எட்டி, 8 விழுக்காடு அதிகரித்தது. ஒத்துழைப்பை மேற்கொள்வது, கூட்டு வளர்ச்சி அடைவது, பொது எதிர்காலச் சமூகத்தை முன்னெடுப்பது முதலியவற்றால் தான், சீனாவுக்கும் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்குமிடையில் இந்த சிறந்த முன்னேற்றங்கள் படைக்கப்பட்டுள்ளன.