பசிபிக் தீவு நாடுகளுக்கு அமெரிக்கா உண்மையான உதவியளிக்க வேண்டும்
2022-09-30 20:10:46

அமெரிக்க-பசிபிக் தீவு நாடுகளின் முதலாவது உச்சி மாநாடு செப்டம்பர் 28 மற்றும் 29ஆம் நாள் வாஷிங்டனில் நடைபெற்றது. அமெரிக்க அரசுத் தலைவர் ஜோ பைடன் கூறுகையில், அமெரிக்கா, பசிபிக் தீவு நாடுகளுடனான உறவை ஆழமாக்குவது, நடப்பு உச்சி மாநாட்டின் நோக்கமாகும். மேலும், காலநிலை மாற்றம், கடல் பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் பசிபிக் தீவு நாடுகளுடன் ஒத்துழைப்புகளை வலுப்படுத்தும் வகையில், அவற்றுக்கு 81 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள கூடுதல் உதவியை அமெரிக்கா வழங்கும் என்றார்.

பசிபிக் தீவு நாடுகளுக்கு அமெரிக்கா உதவி அளிக்கும் வாக்குறுதி நல்லது. ஆனால் வாய் மூலமாக அளிக்கப்பட்ட வாக்குறுதிக்குப் பதிலாக, நடைமுறைக்கு ஏற்ற உண்மையான உதவி தான் இந்த தீவு நாடுகளுக்கு வேண்டும்.

முதலில், உண்மையான பணத்தை அமெரிக்கா வழங்க வேண்டும். அடுத்து, காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பதில் அமெரிக்கா தனது செயல்களின் மூலம் முன்மாதிரியாக விளங்க வேண்டும்.

மேலும், பசிபிக் தீவு நாடுகளின் வளர்ச்சிக்கு அமெரிக்கா மனமார்ந்த உதவியளிக்க விரும்பினால், அந்நாடுகளின் அரசுரிமை மற்றும் விருப்பத்துக்கு முழுமையாக மதிப்பு அளிக்க வேண்டும். அரசியல் நிபந்தனைகளை திணிக்கக்கூடாது. எந்த ஒரு மூன்றாவது தரப்புக்கும் எதிராக அமைக்கக்கூடாது. ஒத்துழைப்பின் பெயரில் புவியமைவு அரசியல் எதிரெதிர் நிலைமையை உருவாக்கக்கூடாது.