முற்றிலும் நிராகரிக்கப்பட்டுள்ள அணு ஆற்றல் நீர்மூழ்கிக் கப்பல் ஒத்துழைப்பு
2022-10-03 16:42:45

அண்மையில் நிறைவடைந்த சர்வதேச அணு ஆற்றல் நிறுவனத்தின் 66ஆவது மாநாட்டில் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான அணு ஆற்றல் நீர்மூழ்கிக் கப்பல் ஒத்துழைப்பைச் "சட்டப்பூர்வமாக்கும்" திருத்தம் முற்றிலும் நிராகரிக்கப்பட்டது.

அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளிலுள்ள சிலர் "விதி அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கு" என்ற சொற்களை அடிக்கடி கூறி வருகின்றனர். ஆனால் அதற்குப் புறம்மாகவே செயல்படுகின்றனர். அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியாவின் அணு ஆற்றல் நீர்மூழ்கிக் கப்பல் ஒத்துழைப்பு, அணு ஆயுத பரவல் தடுப்பு ஒப்பந்தம், சர்வதேச அணு ஆற்றல் நிறுவனத்தின் சட்டவிதிகள், தென் பசிபிக் அணு ஆயுதமில்லாத மண்டல ஒப்பந்தம் ஆகிய மூன்று பெரிய சர்வதேச ஒப்பந்தங்களை மீறியுள்ளது. அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியாவின் அணு ஆற்றல் நீர்மூழ்கிக் கப்பல் ஒத்துழைப்பு, பிரதேசத்தின் அணு பாதுகாப்பு மற்றும் அணு பாதுகாப்பு உத்தரவாதத்துக்குக் கடுமையான அறைகூவல்களை ஏற்படுத்தியுள்ளது. இத்திருத்தம் நிராகரிக்கப்படுவது, சர்வதேச நீதியின் வெற்றியாகும். சர்வதேசப் பொது ஒப்பந்தம் மற்றும் விதிகளின் மதிப்பையும் பாதுகாப்பையும் இது காட்டியுள்ளது. இதுவும், மேலாதிக்கவாதத்துக்கு ஒரு எதிர்தாக்குதலாகும்.

தற்போது, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான அணு ஆற்றல் நீர்மூழ்கிக் கப்பல் ஒத்துழைப்பு குறித்து விவாதிக்க சர்வேதச அணு ஆற்றல் நிறுவனம் அரசுகளுக்கிடையேயான பரிசீலனை செயல்முறையைத் தொடங்கியுள்ளது. இப்பிரச்சினையைத் தீர்க்க இதுவே சரியான வழியாகும்.