இனவெறி பிரச்சினையை அமெரிக்கா தீர்க்க வேண்டும்:சீனா
2022-10-06 16:59:04

ஐ.நா மனித உரிமை செயற்குழுவின் 51ஆவது கூட்டத்தொடரில், அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் சிறுபான்மை இனத்தவர்கள் மீது பாகுபாட்டுடன் சட்டத்தை அமலாக்குவதற்கு சீனப் பிரதிநிதி கண்டனம் தெரிவித்தார்.

2020ஆம் ஆண்டு மே திங்கள், ஆப்பிரிக்க வம்சாவழியினர் ஃப்ளாயிட், வெள்ளையினக் காவற்துறையினரால் கொல்லப்படுவதற்கு முன், “என்னால் சுவாசிக்க முடியவில்லை”என்று சொன்னார். இதன் மூலம், அமெரிக்கச் சமூகத்தில் ஆழமாக வேரூன்றியிருந்த இனவெறி பிரச்சினை வெளிக்காட்டப்பட்டது.

அமெரிக்க அரசியல் அறிஞர் மைக்கேல் டெஸ்லர் குறிப்பிடுகையில், கடந்த 50 ஆண்டுகளில் இனப் பிரச்சினையில் உண்மையான முன்னேற்றம் அமெரிக்காவில் ஏற்பட வில்லை என மேலும் அதிகமான அமெரிக்கர்கள் கருதுகின்றனர். ஆப்பிரிக்க வம்சாவழியினரைத் தவிர, ஆசிய மக்கள், முஸ்லிம் முதலிய சிறுபான்மை இனத்தவர்களும், கோவிட்-19 பரவல் மற்றும் அமெரிக்க அரசின் பாகுபாட்டுக் கொள்கைகளால், வன்முறை அச்சுறுத்தலை எதிர்கொண்டு வருகின்றனர் என்று தெரிவித்தார்.

தேசிய அமைப்பு முறையில் இனவெறி பிரச்சினையை அமெரிக்கா தீர்க்க வேண்டுமென பல்வேறு தரப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. அமெரிக்கா இக்குற்றச்சாட்டுகளைப் புறக்கணித்துச் செயல்படக் கூடாது.