கடந்த 10 ஆண்டுகளில் திபெத்தின் மாபெரும் வளர்ச்சி
2022-10-06 19:02:29

2012ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை, திபெத் தன்னாட்சிப் பிரசேத்தில் 525 திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அவற்றின் மொத்த முதலீட்டுத் தொகை 68 ஆயிரத்து 260 கோடி யுவானாகும்.

2021ஆம் ஆண்டில் மொத்த திபெத் உற்பத்தி மதிப்பு 20 ஆயிரம் கோடி யுவானைத் தாண்டியது. மேலும் அதன் வளர்ச்சி விகிதம் பல ஆண்டுகளாக நாட்டின் முன்னணியில் உள்ளது. 2021ஆம் ஆண்டில்,

அதன் நபர்வாரி மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு, 56 ஆயிரத்து 800 யுவானைத் தாண்டி, முந்தைய ஆண்டை விட 7.6 விழுக்காடு அதிகம். இது தேசிய சராசரி நிலையை விட 1.5 விழுக்காடு அதிகமாகும்.

கடந்த 10 ஆண்டுகளில் திபெத்தில் அடிப்படை வசதிகளின் கட்டுமானம் நாளுக்கு நாள் மேம்பட்டுள்ளது.

இப்பிரதேசத்தில் ஒருங்கிணைந்த பலபரிமாண போக்குவரத்து சேவை நிறைவேற்றப்பட்டுள்ளது. நெடுஞ்சாலையின் மொத்த நீளம் 1 இலட்சத்து 20 ஆயிரம் கிலோமீட்டராகும். 152 சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான நெறிகள் திறக்கப்பட்டுள்ளன.