© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாட்டுக்கான செய்தி மையம் அக்டோபர் 12ஆம் நாள் இயங்குவதோடு அதன் வரவேற்பு சேவை தொடங்கும். செய்தியாளருக்கான சேவைப் பகுதி, பெய்ஜிங் புதிய நூற்றாண்டு நிக்கோ ஹோட்டலில்(Hotel Nikko New Century Beijing) அமைக்கப்பட்டுள்ளது.
கட்சியின் 20ஆவது தேசிய மாநாடு பற்றி செய்திகளைச் சேகரிக்கும் விதம், சீனாவின் ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசம், மக்கௌ சிறப்பு நிர்வாகப் பிரதேசம், தைவான் பிரதேசம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வரும் செய்தியாளர்களுக்கு, நேர்காணல் சான்றிதழ், பேட்டிக்கான விண்ணப்பம் உள்ளிட்டவை தொடர்பான சேவைகளை இம்மையம் வழங்கும். செய்தியாளர் சந்திப்பு மற்றும் தொடர்புடைய நேர்காணல் நிகழ்ச்சிகளுக்கும் இம்மையம் ஏற்பாடு செய்யும்.
இச்செய்தி மையத்தின் இணையதளம்(http://20th.cpcnews.cn) மற்றும் அதன் விசேட், வேய்போ போன்ற கணக்குகள் அக்டோபர் 10ஆம் நாள் இயங்க உள்ளன. இத்தளங்களில் நடப்பு மாநாடு தொடர்பான தகவல்களும், செய்தியாளர் கூட்டம், நேர்காணல் நிகழ்வு ஆகியவற்றுக்கான பொது அறிவிப்புகளும் உரிய நேரத்தில் வெளியிடப்படும்.