மால்வினாஸ் தீவுகள் பிரச்சினை பற்றிய சர்வதேசச் சமூகத்தின் நிலைப்பாடு
2022-10-09 10:49:47

52வது அமெரிக்க நாடுகள் அமைப்பு மாநாடு அக்டோபர் 7ஆம் நாள் நிறைவு பெற்றது. இம்மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானம் ஒன்றில், மால்வினாஸ் தீவுகளின் மீதான அர்ஜென்டீனாவின் சட்டப்பூர்வ உரிமையைப் பேணிக்காத்து, அமைதி பேச்சுவார்த்தையின் மூலம் சர்ச்சைகளைத் தீர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அர்ஜென்டீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு ஐ.நா தரப்பு பலமுறை பிரிட்டன் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. ஆனால், பிரிட்டன் இதை மறுத்ததால் இப்பிரச்சினை தேக்க நிலையில் சிக்கியுள்ளது.

மால்வினாஸ் தீவுகளை நிரந்தரமாகக் கைப்பற்றுவதற்குச் சாக்குப்போக்குகளைத் தேடுவது, பிரிட்டன் அரசியல்வாதிகளின் உள்நோக்கமாகும். ஆனால், மால்வினாஸ் தீவுகளுக்கான உரிமையை அர்ஜென்டீனா பேணிக்காப்பதற்கு சர்வதேசச் சமூகம் ஆதரவு அளித்து வருகிறது. சர்வதேச ஒழுக்க நெறி மற்றும் நேர்மையைப் பேணிக்காப்பது மட்டுமல்லாமல், காலனியாதிக்கத்தை எதிர்க்கும் நியாயம் இதுவாகும். தற்போது, சர்வதேச உறவை ஜனநாயகமயமாக்கும் நிலைமையில், காலனியாதிக்கம் நிலவக்கூடாது.