திபெத்தில் உறைவிட சூழல் மேம்பாடு
2022-10-10 14:24:44

2012ஆம் ஆண்டு முதல், சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசம் புதிய ரகத்திலான நகர மயமாக்கக் கட்டுமான முன்னேற்றத்தை விரைவுப்படுத்தி வருகிறது. நகர மற்றும் கிராமப்புறத்தில் உறைவிட சூழல் பெருமளவில் மேம்பட்டு வருகிறது.

மேலும், கடல் மட்டத்திலிருந்து உயரமான இடத்திலுள்ள நகரங்களில் வெப்ப வசதிகள் மற்றும் ஆக்கிஜன் வசதிகள் தொடர்ந்து முன்னேற்றப்பட்டு வருகின்றன. நகரங்களில் ஒருங்கிணைந்த நீர் விநியோகமும், கிராமப்புறத்தில் குடிநீர் பாதுகாப்பும் நனவாக்கப்பட்டுள்ளன.

தரவுகளின்படி, 2021ஆம் ஆண்டு, திபெத்தில் விவசாயிகள் மற்றும் ஆயர்களின் நபர்வாரி உறைவிட பரப்பு 40.63 சதுர மீட்டராகும். 2012ஆம் ஆண்டு இறுதியில் இருந்ததை விட இது 11.05 சதுர மீட்டர் அதிகம்.