ஆஸ்திரிய அரசுத் தலைவருக்கு சீன அரசுத் தலைவரின் வாழ்த்துக்கள்
2022-10-10 19:16:34

ஆஸ்திரிய அரசுத் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அலெக்சாண்டர் வான் டெர் பெல்லெனுக்கு, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 10ஆம் நாள் திங்கள்கிழமை வாழ்த்து தெரிவித்தார்.

அவர் கூறுகையில், சீன-ஆஸ்திரிய உறவுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறேன். அரசுத் தலைவர் லான்டெர் பெல்லெனுடன் இணைந்து, இரு நாட்டு நட்பு நெடுநோக்கு கூட்டாளியுறவின் வளர்ச்சியை முன்னெடுக்கவும், இரு நாடுகளுக்கும் மக்களுக்கும் நலன் கொண்டு வரவும் விரும்புவதாக தெரிவித்தார்.