கடந்த 10 ஆண்டுகளில் சீனாவில் 9.48 கோடி வேலை வாய்ப்புகள் அதிகரிப்பு
2022-10-11 15:13:43

சீனத் தேசிய புள்ளிவிபரப் பணியகம் 10ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையின்படி, 2021ஆம் ஆண்டில் சீனாவின் நகரங்களில் வேலை செய்யும் மக்களின் மொத்த எண்ணிக்கை 46 கோடியே 77 இலட்சத்து 30 ஆயிரமாகும். இது 2012ஆம் ஆண்டில் இருந்ததை விட 9 கோடியே 48 இலட்சத்து 60 ஆயிரம் அதிகமாகும்.

இந்த பத்து ஆண்டுகளில், ஆண்டுக்குச் சராசரியாக வேலை வாய்ப்பை இழந்த 55 இலட்சம் பேர் புதிய வேலை வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர். வறுமையில் திண்டாடிய 17 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் வேலை வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர். சுமார் 50 ஆயிரம் வேலையற்றக் குடும்பங்களில் குறைந்தது ஒருவர் வேலை வாய்ப்பைப் பெற்றுள்ளார்.  

தரவுகளின்படி, நாடளவில் தொழிற்துறை, வேளாண்துறை மற்றும் சேவைத் துறைகளில் வேலை செய்பவர்களின் வகிதாசாரம் முறையே 22.9%、29.1% மற்றும் 48% ஆகும்.