ஜூலியா சூறாவளியால் மத்திய அமெரிக்க பகுதிகளில் 26பேர் உயிரிழப்பு
2022-10-11 18:46:02

ஜூலியா சூறாவளி 9ஆம் நாள் விடியற்காலையில் நிகரகுவாவில் கரையை கடந்த பிறகு, மத்திய அமெரிக்க பகுதிகளில் வெள்ளப்பெருக்கு, மலைச்சரிவு உள்ளிட்ட சீற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. அதன் பாதிப்பால் 10ஆம் நாளிரவு வரை குறைந்தது 26பேர் உயிரிழந்தனர்.

சூறாவளியால் பாதிக்கப்பட்ட தென் அமெரிக்கா மற்றும் மத்திய அமெரிக்க நாடுகளுக்குச் சீனா இயன்ற அளவில் நிவாரண உதவி வழங்க விரும்புவதாகச் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மௌநிங் 11ஆம் நாள் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட நாடுகளின் அரசும் மக்களும் கூடிய விரைவில் சீற்றங்களைத் தோற்கடித்து அருமையான வீட்டை மறுசீரமைக்க முடியுமென நம்புகிறோம் என்றும் அவர் கூறினார்.