இலங்கைக்கு ரஷியாவின் ஏரோஃப்ளோட் விமான சேவை தொடக்கம்
2022-10-11 10:31:41

இலங்கைக்கான ரஷியாவின் ஏரோப்ளோட் விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டது. கடந்த ஜூனுக்குப் பிறகு, முதன்முறையாக ஏரோப்ளோட் விமானம், சுற்றுலாப பயணிகளுடன், இலங்கையின் பண்டாரநாயகா விமான நிலையத்தை திங்கள்கிழமை காலை அடைந்தது.

இலங்கையின் சுற்றுலா சந்தைக்கு ரஷியா முக்கிய ஆதாரமாக உள்ளது என்றும் விமான சேவையின் தொடக்கம் இலங்கையின் பொருளாதாரத்தைத் தூண்டும் என்றும் கொழும்பில் உள்ள ரஷிய இல்லம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, ஐரிஷ் விமான சேவை நிறுவனத்துடனான வணிக ரீதியான பிரச்னையைத் தொடர்ந்து, கடந்த ஜுன் 4ஆம் நாள் ஏர்பஸ் ஏ330 விமானத்தை இலங்கை அதிகாரிகள் நிறுத்தி வைத்தனர். இதனைத் தொடர்ந்து, இலங்கைக்கான சேவையை ஏரோப்ளோட் நிறுத்தியது.