வான் தாக்குதலில் 14 பேர் பலி, 97 பேர் காயம்:உக்ரைன் அரசு
2022-10-11 11:13:40

ரஷிய ராணுவம் 10ஆம் நாள் உக்ரைனின் மீது நடத்திய வான் தாக்குதலில் 14 பேர் உயிரிழந்தனர், 97 பேர் காயமடைந்தனர். 8 மாநிலங்கள் மற்றும் தலைநகர் கீவிலுள்ள முக்கிய உள்கட்டமைப்புகள் தாக்குதலில் பாதிக்கப்பட்டன என்று உக்ரைன் தேசிய அவசர விவகாகப் பணியகம் தெரிவித்தது. திங்கள்கிழமை இரவு 9 மணி வரை நாட்டிலுள்ள 1307 குடியிருப்புப் பிரதேசங்களுக்கான மின்சார விநியோகப் பாதிப்பு இன்னும் சரிசெய்யப்படவில்லை என்றும் கூறப்பட்டது.

ரஷிய கூட்டாட்சி பாதுகாப்புக் கூட்டத்தில் அரசுத் தலைவர் விளாடிமிர் புதின் 10ஆம் நாள் கூறுகையில், ரஷிய பாதுகாப்புப் படை தரை, வான் மற்றும் கடற்பரப்பிலிருந்து உக்ரைனின் ராணுவ இலக்குகளின் மீது தாக்குதல் நடத்தியது என்று தெரிவித்தார்.