வாஷிங்டன் மேலாதிக்கத்தின் தோல்வி
2022-10-11 11:25:50

நவம்பர் திங்கள் முதல்,  தினசரி 20 இலட்சம் பீபாய்களின் கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைக்க ஒபேக் ப்ளஸ் அமைப்பு தீர்மானித்தது. தூதாண்மை ரீதியில் பார்த்தால், இத்தீர்மானம் அமெரிக்க அரசுத் தலைவர் பைடனுக்கு சவுக்கடியாகும். மத்திய கிழக்கில் கச்சா எண்ணெயை உற்பத்தி செய்யும் முக்கிய நாடுகள் பண வீக்கத்தைக் கட்டுப்படுத்த அமெரிக்காவுக்கு உதவிகரமாக இருக்கும் வகையில் உற்பத்தியளவை அதிகரிக்க வேண்டும் என்ற பைடனின் எதிர்பார்ப்பு நனவாகவில்லை.

அமெரிக்காவின் கட்டளையைப் பின்பற்ற விரும்பாத வளைகுடா நாடுகள் சொந்த நலனை பேணிக்காப்பதன் உறுதி இதில் தெளிவாகத் தெரிந்தது.

சௌதி அரேபியா உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளின் சுதந்திரத்தன்மை படிப்படியாக வலுவடைந்து வருகின்றது.

இந்த நாடுகள் அமெரிக்காவின் சார்பு நாடுகளல்லாமல் சொந்த நலனைக் கருத்தில் கொண்டு செயல்படும் என அமெரிக்கா அறிந்து கொள்ள வேண்டும்.

ஒபேக் ப்ளஸ் கச்சா எண்ணெய் உற்பத்தி அளவை குறைப்பது குறித்து குற்றஞ்சாட்டிய அமெரிக்கா ஐரோப்பிய கூட்டாளிகளுக்கு விற்பனை செய்யும் எரிவாயுவின் விலையை  அதிகரிக்கவும் முயற்சித்தது. அமெரிக்காவின் சுயநலத்தையும் மேலாதிக்கத்தையும் இது வெளிக்காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.