குறைவான விலையில் மின்னாற்றல் வழங்கும் சிபெக் நிலக்கரி ஆலை – பாகிஸ்தான்
2022-10-11 10:32:16

சீன-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத் திட்டத்தின் கீழ் தார் பாலைவனத்தில் கட்டமைக்கப்பட உள்ள தார் நிலக்கரி ப்ளாக்-2 மின்சார ஆலை, நுகர்வோருக்கு குறைந்த விலையில் தூய மின்னாற்றலை வழங்கும் என்று பாகிஸ்தான் தலைமை அமைச்சர் ஷபாஷ் ஷாரிப் திங்கள்கிழமை தெரிவித்தார்.

தார் நிலக்கரி ப்ளாக்-2 மின்சார ஆலையின் துவக்க விழாவில் உரையாற்றிய அவர், இறக்குமதி செய்யப்படும் மின்னாற்றல் மற்றும் எரிவாயுவுக்கு நுகர்வோர் அதிக கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. நுகர்வோருக்கு ஆறுதலாக தார் நிலக்கரி ஆலை இருக்கும் என்று தெரிவித்தார்.

எதிர்காலத்தில், நிலக்கரி சார்ந்து இயங்கும் அனைத்து ஆலைகளும், தார் நிலக்கரி ஆலையை முன்மாதிரியாகக் கொண்டிருக்க வேண்டும். இந்த ஆலை குறைவான கட்டணத்தில் மின்சாரத்தை விநியோகிக்க உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.