விண்வெளி நிலையத்தில் வெற்றிகரமாக நடந்த சிறப்பு வகுப்பு
2022-10-12 17:47:53

தியன்கொங் எனும் சீன விண்வெளி நிலையத்தில் அறிவியல் கல்விப் பரப்புரைக்கான சிறப்பு வகுப்பு 12ஆம் நாள் புதன்கிழமை மாலையில் 3ஆவது முறையாக வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. ஷென்சோ-14 விண்கலக் குழுவினர்கள் மூவரும் விண்வெளி நிலையத்தின் வென்தியான் விண்கலத்திலேயே மாணவர்களுக்கு இந்த வகுப்பை நடத்தினர்.

சுமார் 50 நிமிட நேர வகுப்பில்,  விண்வெளி நிலையத்தில் விண்வெளி வீரர்களின் பணி மற்றும் வாழ்க்கைக் காட்சிகள் எடுத்துக்காட்டப்பட்டதோடு விதவிதமான பரிசோதனைகளும் நடத்தப்பட்டன.

இந்த வகுப்பு நிகழ்ச்சியில் துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 400 மாணவர்கள் பங்கேற்றனர். இதில்,  விண்வெளி வீரர்கள் விண்வெளி நிலையத்தில் இருந்து காணொளி வழியாக மாணவர்களுடன் பரிமாற்றம் மேற்கொண்டு, அவர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தனர்.