உலகில் தூய்மையான ஆற்றல் விநியோகத்தை அதிகரிக்க உலக வானிலை அமைப்பு வேண்டுகோள்
2022-10-12 17:07:40

எதிர்வரும் 8 ஆண்டுகளில், உலகளவில் தூய்மையான ஆற்றல் மூலம் கிடைக்கும் மின்சாரம் கட்டாயம் ஒரு மடங்கு  அதிகரிக்க வேண்டும். இந்த முயற்சியால் தான், புவி வெப்பமயமாதல் பயனுள்ள முறையில் தடுக்க முடியும். இல்லையென்றால், காலநிலை மாற்றம், தீவிர வானிலை அதிகரிப்பு மற்றும் தண்ணீர் பஞ்சம் ஆகிய காரணங்களால், உலக எரிசக்தி பாதுகாப்புக்கு அபாயம் ஏற்படக் கூடும். உலக வானிலை அமைப்பு 11ஆம் நாள் செவ்வாய்கிழமை வெளியிட்ட 2022ஆம் ஆண்டுக்கான காலநிலை சேவை அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூரிய ஒளி, காற்று, நீர் ஆகியற்றின் மூலம் மின்சார உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று உலக வானிலை அமைப்பின் பொதுச் செயலாளர்  பீட்டெரி தாலஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.