சீனாவில் நகரவாசி—கிராமவாசி வருமான இடைவெளி தொடர்ந்து குறைவு
2022-10-12 10:37:20

சீனத் தேசிய புள்ளிவிபரப் பணியகம் 11ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையின்படி, 2021ஆம் ஆண்டில் சீனாவில் நபர்வாரி செலவழிப்பு வருமானம் 35 ஆயிரத்து 128 யுவானாகும். 2012ஆம் ஆண்டை விட இது 18 ஆயிரத்து 618 யுவான் அதிகம். ஆண்டுக்கு சராசரியாக 6.6 விழுக்காடு அதிகரித்துள்ளது. தவிரவும், நகரவாசிகளுக்கும் கிராமவாசிகளுக்கும் இடையிலான வருமான இடைவெளி குறைந்து வருகின்றது. கிராமவாசிகளின் வருமான அதிகரிப்பு நகரவாசிகளை விட ஆண்டுக்கு சுமார் 1.7 விழுக்காடு அதிகரித்துள்ளது.

இதனிடையில், மக்களின் நுகர்வு ஆற்றல் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது. 2021ஆம் ஆண்டில் முழு நாட்டிலும் நபர்வாரி நுகர்வு 24.1 ஆயிரமாகும். கடந்த 10 ஆண்டுகளில் இது ஆண்டுக்கு 5.9 விழுக்காடு என்ற வேகத்தில் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.