யுனேஸ்கோவின் பரிசளிப்பு விழாவுக்கு பேங் லியுவான் வாழ்த்துரை
2022-10-12 10:35:06

பெண் குழுந்தைகள் மற்றும் மகளிர் கல்விக்கான யுனேஸ்கோ அமைப்பின் பரிசு வழங்கும் விழா அக்டோபர் 11ஆம் நாள் பிரான்ஸின் பாரிஸில் நடைபெற்றது. கம்போடியா மற்றும் தான்சானியாவின் அமைப்புகள் இப்பரிசை வென்றன. சீன அரசுத் தலைவரின் மனைவியும், பெண் குழந்தைகள் மற்றும் மகளிர் கல்வி முன்னேற்றத்துக்கான யுனேஸ்கோவின் சிறப்பு தூதருமான பேங் லியுவான் அம்மையார் இவ்விழாவுக்கு வாழ்த்துரை வழங்கினார்.

பேங் லியுவான் கூறுகையில், பெண் குழந்தைகள் மற்றும் மகளிர் கல்வி, பெண்களின் சொந்த வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல், மனிதகுலச் சமூகத்தின் நிலையான வளர்ச்சியை முன்னேற்றுவதற்கும் முக்கியத்துவம் வாய்ந்தது. இக்கல்வித் துறையில் சீனா எப்போதுமே மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. மேலும் நியாயம், அனைத்தையும் உள்ளடக்கும் தன்மை மற்றும் தரம் ஆகியவை கொண்ட திசையில் பெண் குழந்தைகள் மற்றும் மகளிர் கல்வியை வளர்க்க, பல்வேறு தரப்புகளுடன் இணைந்து செயல்பட சீனா விரும்புகிறது என்று தெரிவித்தார்.