ஜப்பானின் ஒரு சிறிய ராக்கெட் ஏவுவதில் தோல்வி
2022-10-12 19:55:15

ஜப்பானிய விண்வெளி ஆய்வு நிறுவனம் அக்டோபர் 12ஆம் நாள் திட எரிப்பொருளைப் பயன்படுத்தும் சிறிய ராக்கெட் மூலம் 8 செயற்கைகோள்களைச் செலுத்தியது. ஆனால், இந்த ராக்கெட் ஏவப்பட்டு வானில் நுழைந்த சிறிது நேரத்துக்குப் பின் அதில் கோளாறு ஏற்பட்டது.  இந்நிலையில், தரைக் கட்டுப்பாட்டு மையப் பணியாளர், இந்த ராக்கெட்டுக்கு சுய அழிவுக் கட்டளையை அனுப்பியதாக கூறப்பட்டுள்ளது.

தற்போது, ராக்கெட்டில் கோளாறு ஏற்பட்ட காரணம் குறித்து புலனாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.