இவ்வாண்டின் முதல் 8 திங்களில் சீனாவின் சேவைத் துறையின் ஏற்றுமதி இறக்குமதி வளர்ச்சி
2022-10-13 15:23:42

சீன வணிக அமைச்சகம் 12ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, இவ்வாண்டின் முதல் 8 திங்களில் சீனாவின் சேவை வர்த்தகம் தொடர்ந்து நிலையாக வளர்ந்துள்ளது.

விவரபாமாகப் பார்த்தால், சேவைத் துறையின் மொத்த ஏற்றுமதி இறக்குமதித் தொகை 3 இலட்சத்து 93 ஆயிரத்து 756 கோடி யுவானாகும். இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 20.4 விழுக்காடு அதிகம்.

இதில், அறிவுகள் செறிந்து கொண்ட வணிகச் சேவையின் ஏற்றுமதி இறக்குமதித் தொகை கடந்த ஆண்டை விட 11.4 விழுக்காடு அதிகரித்து, 1 இலட்சத்து 64 ஆயிரத்து 327கோடி யுவானாகும். இதில் அறிவுசார் சொத்துரிமைக்கான பயன்பாட்டுக் கட்டணம், தொலைத் தொடர்புக் கணிணி மற்றும் தகவல் சேவை ஆகிய துறைகளில் சீரான வளர்ச்சி காணப்பட்டுள்ளது. மிக வேகமாக வளர்ந்து வரும் துறை காப்பீட்டுச் சேவையாகும்.