ஐரோப்பாவுக்கு எரியாற்றல் வினியோகத்தை நிறைவேற்ற ரஷியா இன்னும் தயாராக உள்ளது
2022-10-13 18:25:38

உலகப் பொருளாதாரமும் எரிசக்தியும் கடும் நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றன. சில நாடுகள் மட்டுமே நடத்திய சீர்குலைவுச் செயல், இந்நெருக்கடியை ஏற்படுத்திய காரணிகளில் ஒன்றாகும் என்று ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதின் தெரிவித்தார்.

அக்டோபர் 12ஆம் நாள் நடைபெற்ற ரஷிய எரிசக்தி வார நிகழ்வில் புதின் கூறுகையில், முழு ஐரோப்பிய கண்டத்தின் எரிசக்தி பாதுகாப்பைச் சீர்குலைத்து, மலிவான எரிசக்தியைத் தடுப்பது, நோர்ட் ஸ்ட்ரீம் இயற்கை எரிவாயு குழாய் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தியதன் நோக்கமாகும் என்று தெரிவித்தார்.

மேலும், எரிவாயு அனுப்பும் நோர்ட் ஸ்ட்ரீம்-2 குழாயைச் சேர்ந்த ஒரு கிளை இன்னும் இயங்கி வருகிறது. அதேவேளையில், எரியாற்றல் வினியோக ஒப்பந்தத்தை நிறைவேற்ற ரஷியா இன்னும் தயாராக இருக்கிறது. இந்நிலைமையில், ஐரோப்பிய ஒன்றியம் தான் இதில் முடிவு எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.