அகதிகள் பிரச்சினைகள் பற்றிய சீனாவின் நிலைப்பாடு
2022-10-13 10:00:03

அகதிகள் பிரச்சினைகள் குறித்த சீனாவின் நிலைப்பாட்டையும் சர்வதேச அகதிகள் பாதுகாப்பு மற்றும் மனித நேய இலட்சியத்துக்காக சீனாவின் ஆக்கப்பூர்வமான பங்களிப்புகளையும் ஜெனீவாவிலுள்ள ஐ.நா.வின் அலுவலகம் மற்றும் ஸ்விட்சர்லாந்திலுள்ள பிற சர்வதேச அமைப்புகளுக்கான சீன நிரந்தரப் பிரதிநிதி சென் சூ 11ஆம் நாள் ஐ.நா.வின் அகதிகள் விவகாரச் செயல் குழுவின் 73ஆவது கூட்டத்தில் விளக்கினார்.

பலதரப்பு ஒத்துழைப்பு மூலம், அகதிகளின் அறைகூவல்களைச் சமாளித்து, ஐ.நா. அகதிகளுக்கான ஐ.நா.வின் உயர்நிலை ஆணையம் முதலிய பலதரப்பு நிறுவனங்கள் அகதிகளின் பிரச்சினைகளைத் தீர்ப்பது, மனித நேய உதவிகளை வழங்குவது ஆகியவற்றில் ஒருங்கிணைப்பான பங்காற்ற வேண்டும். உலக அகதிகளின் பாதுகாப்பு அமைப்பு முறைமையைக் கூட்டாக மேம்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.