மென்மேலும் அதிகமான நாடுகளை ஈர்த்து வருகின்ற சீனச் சந்தை
2022-10-13 11:01:47

உலகமயமாக்கத்துக்கு ஆதரவு அளிப்பதாக ஜெர்மனி தலைமையமைச்சர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் அண்மையில் தெரிவித்தார். மேலும், வேறு நாடுகளுடன் இணைப்பு நீக்கம் செய்வது முற்றிலும் தவறானது. சீனா உள்ளிட்ட பல நாடுகளுடன் வணிகம் செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

உலகளவில் 2வது பெரிய நுகர்வுச் சந்தையான சீனாவில், மொத்தம் ஒரு கோடியே 14 லட்சம் கோடி யுவான் பொருளாதார மதிப்பு மற்றும் 140 கோடிக்கும் மேலான நுகர்வோர்கள் உள்ளனர். 5வது சீனச் சர்வதேச இறக்குமதி பொருட்காட்சி விரைவில் துவங்கும். 280க்கும் மேலான முன்னணி தொழில் நிறுவனங்கள் நடப்புப் பொருட்காட்சியில் கலந்து கொள்ளவுள்ளன.

மேலும், உலகத்தின் முக்கிய விநியோக நாடான சீனாவின் தகுநிலை ஈடு செய்யப்பட முடியாது.

உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பு வெளியிட்ட உலக நாடுகளின் புத்தாக்க குறியீட்டுத் தரவரிசையின்படி, 2012ஆம் ஆண்டில் இருந்த 34வது இடத்திலிருந்து 2021ஆம் ஆண்டில் இருந்த 12வது இடமாக சீனா உயர்ந்துள்ளது. தொழில் துறையின் வளர்ச்சியுடன் மேலதிக அறிவியல் மற்றும் தொழில் நுட்ப இயக்காற்றல் சீனா பெற்றுள்ளது. அத்துடன், தொழிற்துறை சங்கிலியின் மேம்பாடுகள் மேலும் தெளிவாகக் காணப்பட்டுள்ளன என்று இது காட்டுகிறது.

தொலைநோக்கு கொண்டு பார்த்தால், சீனாவின் வளர்ச்சி எதிர்காலம் உறுதியானது. சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணில் சீனா ஊன்றி நிற்கும் மனவுறுதி உறுதியானது. மேலும், பல்வேறு நாடுகளுடன் பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்புகளை வலுப்படுத்தும் மனப்பாங்கும் உறுதியானது.