சீன கம்யூனிஸ்ட் கட்சி 20ஆவது தேசிய மாநாடு பற்றிய கருத்து கேட்டறியல்
2022-10-13 15:41:18

ஆகஸ்டு 31ஆம் நாள் சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி, கட்சி சார்பற்ற பிரமுகர்களுடன் இணைந்து கலந்தாய்வு கூட்டம் ஒன்றை நடத்தியது. இதில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாடு குறித்த இதர கட்சிகளின் மத்திய கமிட்டிகள், அனைத்து சீனத் தொழிற்துறை மற்றும் வணிகத் துறை சம்மேளனத்தின் பொறுப்பாளர்கள், கட்சி சாரா பிரமுகர்களின் பிரதிநிதிகள் ஆகியயோரின் கருத்துகளைச் சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி கேட்டறிந்தது.

சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொது செயலாளர் ஷி ச்சின்பிங் இக்கூட்டத்துக்குத் தலைமை தாங்கி, முக்கிய உரை நிகழ்த்தினார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சி, இதர கட்சிகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, மிக பரவலான நாட்டுப்பற்றுடைய ஐக்கிய முன்னணியை வளர்த்து, பல்வேறு துறையினர்களின் அறிவையும் ஆற்றலையும் ஒன்றிணைத்து, சோஷலிச நவீன நாட்டைப் பன்முகங்களிலும் கட்டியமைப்பதற்கும் சீன நாட்டின் மாபெரும் மறு மலர்ச்சியை முன்னேற்றுவதற்கும் பாடுபட வேண்டும் என்று ஷி ச்சின்பிங் வலியுறுத்தினார்.