சீனா மீது சுங்க வரி போரில் இருந்து அமெரிக்காவுக்கு கிடைத்துள்ள பயன் என்ன?
2022-10-13 20:34:42

சீனா மீது கூடுதலான சுங்க வரி வசூலித்த போதிலும், பொருளாதாரம், அரசியல் மற்றும் சட்டம் ஆகிய எல்லா துறைகளிலும் தோல்வியடைந்தது. அமெரிக்காவின் தி ஹில் எனும் செய்தியேடு சமீபத்தில் வெளியிட்ட கட்டுரையில் அதைக் குறிப்பிட்டதோடு,  சீனா மீதான வர்த்தகப் போரில் அமெரிக்கா தோல்வியடைந்ததையும் ஏற்றுக்கொண்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் எண்ணற்ற ஆதாரங்களால் இந்த முடிவு நிரூபிக்கப்பட்டுள்ளது. சீனா மீது கூடுதலான சுங்க வரி வசூலிப்பதன் மூலம் வர்த்தக பற்றாக்குறையை குறைத்து,  தயாரிப்புத்துறையை அமெரிக்காவுக்கு திருப்பச் செய்து, வேலை வாய்ப்புகளை அதிகரிப்பதாக கூறிய டோனால்ட் டிரம்ப்,  இந்த செயலுக்கு சீன தரப்பு விலை கொடுக்கப் போவதாகவும் தெரிவித்தார்.

இதன் விளைவாக, சீனா மீது கூடுதலான வரி வசூலித்ததால் அமெரிக்க நுகர்வோர் மற்றும் நிறுவனங்களின் செலவு பெருமளவில் அதிகரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் தயாரிப்புத்துறை மறுமலர்ச்சி அடையவில்லை என்று ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம் சுட்டிக்காட்டியது.

முதலாவதாக, அமெரிக்காவின் இத்தகைய செயல், பொருளாதாரம் மற்றும் சந்தை விதிகளை மீறியுள்ளது. அது முன்னேறி செல்ல இயலாது. இரண்டாவதாக, அரசியல் சரியானது என்ற கோட்பாட்டைப் பின்பற்றி, சீனா மீதான கொள்கைகளுக்குத் தவறாக வழிகாட்டுவது, அமெரிக்காவிலேயே உள்ள பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது. தற்போது, அமெரிக்காவில் பணவீக்கம் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு  புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அந்த அழுத்தத்தை எதிர்கொண்ட பைடன் அரசாங்கம், சீனா மீது விதிக்கப்பட்ட கூடுதலான சுங்க வரியை நீக்குவதாக பலமுறை குறித்துக்காட்டியது. ஆனால், அது இன்னமும் அமலுக்கு வரவில்லை.

சர்வதேச உறவில் மேலாதிக்கம் செலுத்துவதற்கு இறுதியில் வேறு வழி இல்லை என்பதை அமெரிக்காவின் வர்த்தகப் போர் முற்றிலும் எடுத்துக்காட்டுகிறது.  அதேவேளையில் சீனா - அமெரிக்கா இடையே ஒத்துழைப்பு இருந்தால் பரஸ்பர நன்மை ஏற்படும். மோதல் ஏற்பட்டால்  யாருக்கும் வெற்றி கிடைக்காது என்பது மீண்டும் மீண்டும் மெய்ப்பிக்கப்பட்ட உண்மை.