உலகப் பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் அபாயம் நெருங்கி வருகிறது
2022-10-14 17:07:39

2023ஆம் ஆண்டு உலகப் பொருளாதார வளர்ச்சி மதிப்பீட்டை ஜூன் மாதத்தில் இருந்த 3விழுக்காட்டிலிருந்து 1.9விழுக்காடாக குறைத்துள்ளதாக உலக வங்கித் தலைவர் டேவிட் மால்பாஸ் 13ஆம் நாள் தெரிவித்தார். உலகப் பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் அபாயம் நெருங்கி வருகிறது.

பணவீக்கம், வட்டி விகித உயர்வு, கடன் அதிகரிப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் வறிய நாடுகளைக் கடுமையாகப் பாதித்துள்ளன என்று அன்று நடைபெற்ற சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் இலையுதிர்கால ஆண்டுக் கூட்டத்திற்கான செய்தியாளர் கூட்டத்தில் மால்பாஸ் கூறினார்.