செப்டம்பரில் சீனாவின் நுகர்வோர் விலை குறியீடு 2.8விழுக்காடு அதிகரிப்பு
2022-10-14 18:57:21

சீனத் தேசிய புள்ளவிவரப் பணியகம் வெளியிட்ட தரவுகளின்படி, 2022ஆம் ஆண்டின் செப்டம்பரில் சீனா முழுவதும் நுகர்வோர் விலை குறியீடு 2021ஆம் ஆண்டில் இருந்ததை விட 2.8விழுக்காடு அதிகரித்துள்ளது. இதில், இந்த குறியீடு, நகரங்களில் 2.7விழுக்காடகவும் ஊரகத்தில் 3.1விழுக்காடாகவும் உயர்ந்துள்ளது. உணவுப் பொருட்களின் விலை 8.8விழுக்காடாக அதிகரித்துள்ளது. உணவற்ற பொருட்களின் விலை 1.5விழுக்காடாக அதிகரித்தது. நுகர்வுப் பொருட்களின் விலை 4.3விழுக்காடாக உயர்ந்தது, சேவை விலை 0.5விழுக்காடாக அதிகரித்தது. தவிரவும், இவ்வாண்டின் முதல் 9 மாதங்களில், நாடு முழுவதும் நுகர்வோர் விலை குறியீடு, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 2.0விழுக்காடு அதிகமாகும்.