உலக தானிய தின நடவடிக்கை துவக்கம்
2022-10-15 17:24:09

ஐ.நா உணவு மற்றும் வேளாண் அமைப்பு 14ஆம் நாள் ரோம் நகரில் உலக தானிய தின நடவடிக்கையின் துவக்க விழாவை நடத்தியது. இந்நடவடிக்கையில் எவரையும் கைவிடக் கூடாது என்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

எவரையும் கைவிடக் கூடாது என்பதை நனவாக்கும் விதம், பல்வேறு தரப்புகள் பல்வேறு நடவடிக்கைகளை கூட்டாக மேற்கொள்ள வேண்டும். இதனால், உணவு அமைப்பு முறையின் முன்னேற்றத்தை விரைவுப்படுத்தி, வறுமையை ஒழிப்பது, பட்டினியையும் ஊட்டச்சத்து குறைப்பாட்டையும் நீக்குவது, சமமின்மையைக் குறைப்பது ஆகியவற்றை முன்னேற்ற வேண்டும் என்று ஐ.நா உணவு மற்றும் வேளாண் அமைப்பு கருத்து தெரிவித்தது. பல்வேறு நாடுகளின் அரசுகள், ஐ.நா தொடரவல்ல வளர்ச்சி இலக்கின் நெடுநோக்குத் திட்டத்தையும் வரவு செலவையும் நனவாக்கும் போக்கில், எவரையும் கைவிடக் கூடாது என்பதை முயற்சியுடன் செயல்படுத்த வேண்டும் என்றும் இவ்வமைப்பு வேண்டுகோள் விடுத்தது.