சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது தேசிய மாநாட்டுக்கான செய்தியாளர் கூட்டம்
2022-10-15 18:38:06

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது தேசிய மாநாட்டுக்கான செய்தியாளர் கூட்டம் அக்டோபர் 15ஆம் நாள் பிற்பகல் பெய்ஜிங் மக்கள் மாமண்டபத்தில் நடைபெற்றது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது தேசிய மாநாடு 16 முதல் 22ஆம் நாள் வரை பெய்ஜிங்கில் நடைபெறவுள்ளது. தற்போது இம்மாநாட்டுக்கான பல்வேறு ஆயத்த பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன என்று இம்மாநாட்டின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இம்மாநாட்டில் கலந்து கொள்ளும் 2296 பிரதிநிதிகளின் தகுதிகள் செல்லுபடியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநாட்டின் போது, அவர்கள் 49 லட்சத்துக்கும் மேற்பட்ட அடிமட்ட கட்சிக் குழுக்கள் மற்றும் 9 கோடியே 60 லட்சத்துக்கும் மேற்பட்ட கட்சி உறுப்பினர்களின் சார்பில், கடந்த கட்சி மத்தியக் கமிட்டியின் அறிக்கையையும், ஒழுங்கு பரிசோதனைக்கான மத்திய ஆணையத்தின் பணியறிக்கையையும் பரிசீலித்து, கட்சி சாசனத்தைத் திருத்தி, கட்சியின் முக்கிய விவகாரங்கள் பற்றி விவாதம் நடத்தி முடிவெடுத்து, கட்சியின் புதிய மத்தியக் கமிட்டி மற்றும் ஒழுங்கு பரிசோதனைக்கான புதிய மத்திய ஆணையத்தையும் தேர்வு செய்வார்கள். தவிரவும், இம்மாநாட்டுக்குப் பிறகு, சீன கம்யூனிஸ்ட் கட்சி 20வது மத்திய கமிட்டியின் முதலாவது முழு அமர்வு நடைபெறும். சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் புதிய நிரந்தர உறுப்பினர்கள் செய்தியாளர் கூட்டத்தில் பங்கெடுக்கவுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.