சிபிசியின் தேசிய மாநாட்டில் கலந்து கொள்ள, பெய்ஜிங் வந்தடைந்த பிரதிநிதிகள்
2022-10-15 16:23:23

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாட்டில் கலந்து கொள்ளும் விதம், நாட்டின் பல்வேறு இடங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் அனைவரும் தலைநகர் பெய்ஜிங்கை 14ஆம் நாள் வரை வந்தடைந்து பதிவு செய்துள்ளனர்.

கட்சியில் ஷிச்சின்பிங்கின் மைய தகுநிலையையும் புதிய யுகத்தில் சீனத் தனிச்சிறப்புடைய சோஷலிசம் பற்றிய அவரது சிந்தனையின் வழிகாட்டல் தகுநிலையையும் உறுதிப்படுத்துவது, கட்சி, இராணுவம் மற்றும் சீனாவின் பல்வேறு இன மக்களின் பொது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளது என்பதை கடந்த 10 ஆண்டுகளில் கட்சி மற்றும் நாட்டின் சிறந்த சாதனைகள் முழுமையாக நிரூபித்துள்ளன என்று இந்தப் பிரதிநிதிகள் ஒருமனதாகக் கருதுகின்றனர்.

கட்சியின் 20ஆம் தேசிய மாநாட்டின் பிரதிநிதியாக, சொந்த கடமைகளை உணர்வுப்பூர்வமாக நிறைவேற்றி, நடப்பு மாநாட்டை, ஒற்றுமை, வெற்றி மற்றும் முன்னேற்றத்துக்கான மாநாடாக நடத்தப் பாடுபடுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.