சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது தேசிய மாநாட்க்கு பல நாட்டுத் தூதர்களின் எதிர்பார்ப்பு
2022-10-15 16:30:44

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது தேசிய மாநாடு அக்டோபர் 16ஆம் நாள் பெய்ஜிங்கில் துவங்கவுள்ளது. சீனாவுக்கான பல நாடுகளின் தூதர்கள் இம்மாநாடு மீதும், சீனாவின் எதிர்கால வளர்ச்சி குறித்தும் எதிர்பார்ப்பு தெரிவித்துள்ளனர்.

சீனாவுக்கான பாகிஸ்தான் தூதர் மொயின் ஹக் கூறுகையில், தொழில் துறை, வேளாண்மை, சுற்றுச்சூழல், அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் உள்ளிட்ட துறைகளில், சீனாவின் வளர்ச்சி, உலக நாடுகளுக்கு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறது. வளரும் நாடுகள் சீனாவின் வளர்ச்சி அனுபவங்களை பயன்படுத்த முடியும் என்றார்.

நேபாளத் தூதர் பிஷ்ணு புகர் ஷ்ரேஸ்தா தெரிவிக்கையில், கரோனா வைரஸ் பரவல் நிலைமையில், பொருளாதார வளர்ச்சியை முன்னேற்றும் நடவடிக்கைகள் இம்மாநாட்டில் முன்வைக்கப்பட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.

ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்களின் 29வது அதிகாரப்பூர்வமற்ற கூட்டம் நவம்பர் திங்கள் தாய்லாந்தில் நடைபெற உள்ளது. சீனாவுக்கான தாய்லாந்து தூதர் அர்த்தயுத் ஸ்ரீசமூட் கூறுகையில், பொருளாதார மீட்சியை முன்னேற்றுவது, இக்கூட்டத்தின் முக்கிய நோக்கமாக இருக்கும் என்றும், ஆசிய-பசிபிக் பொருளாதார ஒருமைப்பாட்டுக்குச் சீனா மேலும் பெரிய பங்காற்ற வேண்டும் என்றும் தாய்லாந்து எதிர்ப்பார்க்கிறது என்று தெரிவித்தார்.