சீன-அமெரிக்க உறவு வளர்ச்சி திசை
2022-10-15 20:06:13

சீன-அமெரிக்க உறவின் வளர்ச்சி திசை, அடுத்த 50 ஆண்டுகளில் சர்வதேச உறவில் மிக முக்கியமான அம்சமாக மாறும். சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷி ச்சின்பிங் முன்மொழிந்த ஒன்றுக்கு ஒன்று மதிப்பு அளிப்பது, சமாதான சக வாழ்வு, ஒத்துழைப்பின் மூலம் கூட்டு நலன் பெறுவது ஆகியவை, இதில் மிக முக்கியமான பகுதியாகும் என்று சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாட்டு செய்தி தொடர்பாளர் சுன் யேலி 15ஆம் நாள் தெரிவித்தார்.

இரு நாடுகளுக்குமிடையிலான வேற்றுமையை விட ஒற்றுமை அதிகம். சரியான நிதானமான சீன-அமெரிக்க உறவு, இரு நாட்டு மக்களின் நலனுக்குப் பொருத்தமாக இருக்கும்.