சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் வெளிநாட்டுத் தொடர்பு
2022-10-15 19:01:05

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் வெளிநாட்டுத் தொடர்பு, கருத்தியல் படி வரையறுக்கப்படவில்லை. பல்வேறு நாடுகளின் பல்வகை அரசியல் கட்சிகள், சீனாவுடன் நட்பு கொள்கை அடிப்படையில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்பு கொள்ள விரும்பினால், அவற்றுடன் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி நட்புறவை உருவாக்க விரும்புகிறது என்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆம் தேசிய மாநாட்டுக்கான செய்தித் தொடர்பாளர் சுன் யேலி 15ஆம் நாள் பெய்ஜிங்கில் தெரிவித்தார்.

நீண்டகாலமாக, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, சுந்திரம், சமநிலை, ஒன்றுக்கு ஒன்று மதிப்பு, உள்விவகாரத்தில் தலையிடாமை ஆகிய கொள்கைகளின் அடிப்படையில், பல்வேறு நாடுகளின் நட்பார்ந்த கட்சிகள் மற்றும் அரசியல் சக்திகளுடன் பரந்தளவில் தொடர்பு கொண்டு வருகிறது. அரசியல் கட்சிகளுடனான உறவின் வளர்ச்சி, நாடுகளுடனான உறவின் வளர்ச்சியை மேம்படுத்தி, மக்களுக்கிடையே புரிந்துணர்வு மற்றும் நட்புறவையும் அதிகரித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.