உத்தரப் பிரேதசத்தில் டெங்கு பரவல்
2022-10-15 18:35:21

உத்தரப் பிரதேசத்தில் டெங்கு நோய் பரவல் நிலைமை பற்றி ஆய்வு செய்யும் விதம் மத்திய அரசின் உயர்நிலைக் குழு அம்மாநிலத்துக்கு விரைந்துள்ளது. அவர்கள், உள்ளூர் மருத்துவத் துறையினருடன் இணைந்து நிலைமையை பரிசீலனை செய்வர் என்று அம்மாநில அதிகாரி ஒருவர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

ஃபிரோஸாபாத், ஆக்ரா மற்றும் இடாவா ஆகிய மூன்று மாவட்டங்களில் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் விதம் உள்ளூர் அதிகாரிகளுக்கு இக்குழுவினர் உதவுவர்.

இக்குழுவில் தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம், தேசிய கொசுக்கள் மூலம் பரவும் நோய் கட்டுப்பாட்டு மையம் மற்றும் தில்லியின் ஆர்எம்எல் மருத்துவமனை ஆகியவற்றைச் சேர்ந்த நிபுணர்கள் இடம்பிடித்துள்ளனர்.

முன்னதாக, உத்தரப் பிரதேசத்தின் முரதாபாத் மாவட்டத்தில் மர்மக் காய்ச்சலுக்கு 6 பேர் உயிரிழந்தனர். டெங்கு காய்ச்சலால் இந்த உயிரிழப்பு நிகழ்ந்திருக்கலாம் என்பதை உள்ளூர் அதிகாரிகள் மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.