36வது தொலை உணர்வறி செயற்கைக்கோள் ஏவப்பட்டது
2022-10-15 15:52:52

சீனாவின் தொலை உணர்வறி செயற்கைக்கோள், லாங்மார்ச்-2டி ஏவூர்தியின் மூலம் அக்டோபர் 15ஆம் நாள் அதிகாலை 3 மணி 12 நிமிடத்தில் சிச்சாங் செயற்கைக்கோள் ஏவு மையத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. யாவ்கான்-36 எனும் இச்செயற்கைக்கோள் திட்டமிட்ட சுற்றுவட்டப் பாதையை தடையின்றி அடைந்தது.

லாங்மார்ச் ஏவூர்திகள் தொகுதியின் 444வது பறத்தல் கடமை இது என்பது குறிப்பிடத்தக்கது.