பொருளாதார வளர்ச்சியில் முன்னேற்றங்களைக் கண்ட சீனா:ஷிச்சின்பிங்
2022-10-16 11:50:45

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது தேசிய மாநாடு 16ஆம் நாள் துவங்கியது. இதில் ஷிச்சின்பிங் உரைநிகழ்த்துகையில், கடந்த 10 ஆண்டுகளில் சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு, 54 இலட்சம் கோடி யுவானிலிருந்து, 114 இலட்சம் கோடி யுவானாக உயர்ந்துள்ளது. சீனாவின் மொத்த பொருளாதார மதிப்பு, உலக மொத்த பங்கில் 18.5 விழுக்காடு வகிக்கிறது7.2 விழுக்காட்டு புள்ளிகள் அதிகரிப்புடன், உலகின் 2ஆவது இடம் பிடித்துள்ளது என்று குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில், 140க்கும் மேலான நாடுகள் மற்றும் பிரதேசங்களின் முக்கிய வர்த்தகக் கூட்டாளியாக சீனா மாறியுள்ளது. இவற்றுடனான மொத்த வர்த்தக மதிப்பு, உலகின் முதல் இடம் பிடித்தது. அந்நிய முதலீட்டை ஈர்ப்பது, வெளிநாடுகளில் முதலீடு செய்வது ஆகியவற்றிலும் சீனா முன்னணியில் உள்ளது. மேலும் பெருமளவில் விரிவான ஆழமான முறையில் வெளிநாட்டுத் திறப்பு உருவாக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.