132வது சீன இறக்குமதி மற்றும் ஏற்றுமதி பொருட்காட்சி துவக்கம்
2022-10-16 17:48:31

132வது சீன இறக்குமதி மற்றும் ஏற்றுமதி பொருட்காட்சி அக்டோபர் 15ஆம் நாள் இணையம் வழியாக துவங்கியது. 35 ஆயிரத்துக்கும் மேலான தொழில் நிறுவனங்கள் இதில் கலந்து கொண்டுள்ளன.

30 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேலான பொருட்கள் இதில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. வரலாற்றில் இது புதிய சாதனையாகும். அவற்றில் நுண்ணறிவுப் பொருட்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 30 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. கரி குறைந்த பசுமையான பொருட்களின் எண்ணிக்கை 5 லட்சத்தைத் தாண்டியுள்ளது. தற்சார்பு அறிவுசார் சொத்துரிமை வாய்ந்த பொருட்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 60 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சந்தைகளை ஒன்றிணைத்துள்ள இப்பொருட்காட்சி, உற்பத்திப் பொருட்களின் புத்தாக்கம், தொழில் சின்னங்களுக்கிடையிலான பரிமாற்றம், உலகளவில் தொழில் சங்கிலி கட்டுமானம் உள்ளிட்ட துறைகளில், பல்வேறு நாடுகளின் தொழில் நிறுவனங்களுக்கு மேலதிக வாய்ப்புகளை வழங்கியுள்ளது.