தூய நீரும் பசுமை மலையும் செல்வம்:ஷி ச்சின்பிங்
2022-10-16 12:26:20

ஷி ச்சின்பிங், சீன கம்யூனிஸ்ட் கட்சி 19ஆவது மத்திய கமிட்டியின் சார்பாக, 20ஆவது தேசிய மாநாட்டில் அறிக்கையை வழங்கினார். அவர் கூறுகையில்,

கடந்த 10 ஆண்டுகளில், நாங்கள் தூய நீரும் பசுமை மலையும் செல்வம் என்ற கருத்தில் ஊன்றி நின்று, சுற்றுச்சூழல் நாகரிக அமைப்பு முறையின் கட்டுமானத்தை மேலும் முழுமைபடுத்தியுள்ளது. இயற்கை சுற்றுச்சூழல் பாதுகாப்பு வரலாறு காணாத அளவில் பன்முகங்களிலும் முன்னேற்றம் அடைந்துள்ளது. சுற்றுச்சூழல் மாசுபாட்டு நிர்வாகத்தை சீனா ஆழமாக முன்னேற்றி, காற்று நீர் நிலம் ஆகியவற்றின் தரத்தைத் தொடர்ந்து பேணிக்காத்து வருகிறது என்றார்.

மேலும் சில முக்கிய தொழில் நுட்ப ஆய்வுகள் முக்கிய சாதனைகளைப் பெற்றுள்ளன. புதிய தொழில்கள் செழுமையாக வளர்ந்து வருகின்றன. மனிதர்கள் விண்வெளி பயணம், உயிரியல் மருத்துவம் உள்ளிட்ட துறைகள் முக்கிய சாதனைகளைைப் பெற்றுள்ளன. சீனா புத்தாக்க நாடாக மாறியுள்ளது என்றும் ஷி ச்சின்பிங் தெரிவித்தார்.

சீன மக்களுக்குத் தலைமை தாங்கி, சோஷலிச வல்லரசாக சீனாவைக் கட்டியமைப்பது, 2ஆவது நூற்றாண்டு இலக்கை நனவாக்குவது, சீனத் தேசத்தின் மறு மலர்ச்சியை முன்னேற்றுவது ஆகியவை தற்போது சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியக் கடமையாகும் என்று அவர் தெரிவித்தார்.