சீனாவின் நவீனமயமாக்கம் எப்படி இருக்கும்?
2022-10-16 19:23:56

சீனாவின் நவீனமயமாக்கம் பற்றி அறிய உங்களுக்கு ஆர்வம் இருக்கலாம். சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாட்டுக்கு வழங்கப்பட்ட அறிக்கையில், அதன் தனிச்சிறப்பு மற்றும் சாராம்சம் பற்றி ஷிச்சின்பிங் விளக்கிக் கூறினார். சீனாவின் நவீனமயமாக்கம், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான சோஷலிச நவீனமயமாக்கம், அதிக மக்கள் தொகை மற்று பொது செழிப்பின் அடிப்படையிலான நவீனமயமாக்கம், பொருள் மற்றும் தார்மீக நாகரிகங்கள் இசைவாக உள்ள நவீனமயமாக்கம், மனிதர் மற்றும் இயற்கையின் இணக்கத்துடன் கூடிய நவீனமயமாக்கம், அமைதியான வளர்ச்சிப் பாதையில் வரும் நவீனமயமாக்கம் ஆகியவை ஆகும்.

சீனப் பாணியுடைய நவீனமயமாக்கம், சீன மக்களுக்கு மட்டுமல்ல, உலக மக்களுக்கும் நன்மை தரும். இது அனைவருடனும் தொடர்புடையது. முதலில், உலக வறுமை ஒழிப்புக்கு இது துணைபுரியும். வரலாற்றில் வறுமைக்கு எதிரான மிகப்பெரிய போராட்டத்தில் சீனா வெற்றி பெற்று, உலகின் வறுமை நிவாரணப் பணியில் முக்கியப் பங்காற்றியுள்ளது. இரண்டாவதாக, உலகின் உணவு நெருக்கடியை தணிவு செய்ய இது உதவும். உலகளவில் முதல் பெரிய தானிய உற்பத்தி நாடாக, உலக மக்கள் தொகையில் 20 விழுக்காட்டினரின் உணவுப் பிரச்சினையைத் தீர்த்துள்ளது. அதனுடன், சர்வதேச உணவுப் பாதுகாப்பு ஒத்துழைப்பை முன்னெடுத்து, மனித நேய உதவியளித்து வரும் சீனா, பல வளரும் நாடுகளுக்கு தொழில் நுட்ப ஆதரவுகளை வழங்கும் முறையுடன் உலக உணவுப் பாதுகாப்பைப் பேணிக்காத்து வருகிறது.

பொது செழிப்பானது, சீனாவின் நவீனமயமாக்கத்தின் மற்றொரு தனிச்சிறப்பு. முன்பை விட மேலும் உயர்நிலை திறப்பை மேற்கொள்ளும் சீனா, உலகத்துடன் மேலதிக சந்தை வாய்ப்புகளைப் பகிர்ந்து கொண்டு, உலகப் பொருளாதார மீட்சிக்கும் மேலும் பெரும் ஆற்றலை வழங்கும் என்பதை இது காட்டுகிறது.

சீனப் பாணியுடைய நவீனமயமாக்கப் போக்கில், உயிரினச் சூழல், உயர் அறிவியல் தொழில் நுட்பம், மனித வளப் பரிமாற்றம் உள்ளிட்ட பல துறைகளில் நன்மைகள் ஏற்படுவது உறுதி.