நாட்டின் ஒன்றிணைப்பை சீனா நனவாக்கும், ஆதிக்கம் செய்யாது:ஷிச்சின்பிங்
2022-10-16 15:02:17

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாட்டில் ஷிச்சின்பிங் அறிக்கையை வழங்கியபோது, தைவான் பிரச்சினையைத் தீர்ப்பது சீன மக்களின் விவகாரமாகும். மிகப் பெரிய நல்லெண்ணம் மற்றும் முயற்சிகளுடன் அமைதியான ஒன்றிணைப்புக்கு செயல்பட்டு, ஆனால் ஆயுதங்களின் பயன்பாட்டை கைவிடுவோம் என்று வாக்குறுதியளிக்க மாட்டோம். நாட்டின் முழுமையான ஒன்றிணைப்பு நனவாவது உறுதி என்று வலியுறுத்தினார்.

மேலும், சுதந்திரமான அமைதியான தூதாண்மை கொள்கையைப் பின்பற்றி, சர்வதேச தொடர்புகளின் அடிப்படை விதிமுறையையும் நீதி மற்றும் நியாயத்தையும் சீனா பேணிக்காத்து வருகிறது. மேலாதிக்க வாதம், வல்லரசு அரசியல், பனிப்போர் சிந்தனை, மற்ற நாடுகளின் உள்விவகாரங்களில் தலையீடு, இரட்டை வரையறை ஆகியவற்றை உறுதியுடன் எதிர்க்கிறது. மேலும், மேலாதிக்கம் மற்றும் ஆட்சி எல்லை விரிவுக் கொள்கையில் சீனா ஒருபோதும் ஈடுபடாது என்றும் அவர் தெரிவித்தார்.