சீனாவில் முழு நடைமுறை ஜனநாயகம்:ஷிச்சின்பிங்
2022-10-16 16:33:03

சீனாவின் ஜனநாயகம் என்ற கருத்தாக்கம், 2200 ஆண்டுகளுக்கு முந்தைய கன்ஃபியூசியெஸ் செவ்வியல் மேற்கோளில் முதலில் பதிவு செய்யப்பட்டது.

முழு நடைமுறை மக்கள் ஜனநாயகம், சோஷலிச ஜனநாயக அரசியலின் சாராம்சமாகும். இது மிகவும் விரிவான, உண்மையான மற்றும் பயனுள்ள ஜனநாயகம் என்று ஷிச்சின்பிங் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது தேசிய மாநாட்டில் தெரிவித்தார்.

சீனாவில் ஜனநாயக முறைமை மூலம், மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும், மக்களின் நலன்கள் பேணிக்காக்கப்படும். எடுத்துக்காட்டாக, 9.6 கோடிக்கும் மேற்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களின் சார்பில் 2296 பிரதிநிதிகள், 20வது தேசிய மாநாட்டில் பங்கெடுத்து, பல்வேறு துறைகளில் மக்களின் விருப்பத்தை வெளிப்படுத்துவர்.

இதைத் தவிர, கட்சி சாரா மக்களின் கலந்துரையாடல் கூட்டம் நடத்தப்பட்டு, 20வது தேசிய மாநாட்டு அறிக்கை பற்றி பரந்தளவில் கருத்துகள் கேட்டறியப்பட்டுள்ளன.