மனிதர் மற்றும் இயற்கையின் இணக்கமான வளர்ச்சி
2022-10-16 17:32:06

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாடு அக்டோபர் 16ஆம் நாள் முற்பகல் பெய்ஜிங் மக்கள் மாமண்படத்தில் துவங்கியது. இம்மாநாட்டில் ஷிச்சின்பிங் கட்சியின் 19ஆவது மத்தியக் கமிட்டியின் சார்பில் அறிக்கையை வழங்கினார்.

இயற்கைக்கு மதிப்பு அளிப்பது, இயற்கையுடன் இணைந்து செயல்படுவது, இயற்கையைப் பாதுகாப்பது ஆகியவை, சோஷலிச நாட்டை பன்முகங்களிலும் கட்டியமைக்கும் தேவைகளாகும். தூய நீரும் பசுமை மலையும் செல்வம் என்ற கருத்தில் ஊன்றி நின்று செயல்பட வேண்டும். மனிதர் மற்றும் இயற்கையின் இசைவான சகவாழ்வின் அடிப்படையில் வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும் என்று ஷி ச்சின்பிங் வலியுறுத்தினார்.