கடந்த 10 ஆண்டுகளில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 3 பெரிய சாதனைகள்
2022-10-16 11:46:39

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாடு அக்டோபர் 16ஆம் நாள் முற்பகல் பெய்ஜிங்கிலுள்ள மக்கள் மாமண்டபத்தில் துவங்கியது. இம்மாநாட்டுக்கு தோழர் ஷி ச்சின்பிங் 19ஆவது மத்திய கமிட்டியின் சார்பில் அறிக்கையை வழங்கினார்.

அவர் கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளில் கட்சி மற்றும் மக்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த 3 சாதனைகள் பெறப்பட்டுள்ளன. முதலில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 100ஆவது ஆண்டு நிறைவை வரவேற்றது. இரண்டு, சீனத் தனிச்சிறப்புடைய சோஷலிசம் புதிய யுகத்தில் நுழைந்தது. மூன்று, வறுமை ஒழிப்பு, குறிப்பிட்ட வசதியுடைய சமூகத்தின் உருவாக்கம் ஆகிய கடமைகளை நிறைவேற்றி, முதல் நூற்றாண்டு குறிக்கோளை நனவாக்கியது. இந்த சாதனைகள், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சீன மக்கள் ஒற்றுமையுடன் பெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றி மட்டுமல்லாமல், உலகத்துக்கும் செல்வாக்கு மிக்க வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியும் ஆகும் என்றார்.