பெய்ஜிங்கில் துவங்கியுள்ள சிபிசியின் 20ஆவது தேசிய மாநாடு
2022-10-16 10:33:53

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாடு அக்டோபர் 16ஆம் நாள் 10 மணிக்கு பெய்ஜிங்கிலுள்ள மக்கள் மாமண்டபத்தில் துவங்கியுள்ளது. இம்மாநாட்டுக்கான 2300க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் மற்றும் சிறப்பு பிரதிநிதிகள், இதில் பங்கெடுத்துள்ளதோடு, கட்சி சாரா நண்பர்கள் மற்றும் தொடர்புடைய தரப்புகளின் பொறுப்பாளர்களும் பார்வையாளராக கலந்து கொண்டுள்ளனர்.

கட்சியின் 19ஆவது மத்தியக் கமிட்டியின் அறிக்கையும், 19ஆவது ஒழுங்கு பரிசோதனைக்கான மத்திய ஆணையத்தின் பணியறிக்கையும் இம்மாநாட்டில் கேட்டறியப்பட்டு பரிசீலனை செய்யப்பட உள்ளன. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி சாசனத்தின் திருத்தம் பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட உள்ளது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மத்தியக் கமிட்டி மற்றும் புதிய ஒழுங்கு பரிசோதனைக்கான மத்திய ஆணையம் தெரிவு செய்யப்பட உள்ளன.

101 ஆண்டுகள் வரலாறுடைய சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட பிறகு தொடர்ந்து 73 ஆண்டுகள் ஆட்சிபுரிந்துள்ளது. கட்சியின் தேசிய மாநாடு மற்றும் அதனால் தேர்ந்தெடுக்கப்படும் மத்தியக் கமிட்டி, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உச்சநிலை தலைமை வாரியங்களாகும்.