குவாங்சி பிரதிநிதிக் குழுவின் விவாதத்தில் ஷிச்சின்பிங்கின் உரை
2022-10-17 17:40:24

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது தேசிய மாநாட்டுக்கான குவாங்சி பிரதிநிதிக் குழுவின் விவாதத்தில் தோழர் ஷி ச்சின்பிங் அக்டோபர் 17ஆம் நாள் முற்பகல் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது தேசிய மாநாடு, கட்சி மற்றும் நாட்டின் லட்சியம் முன்னேற்றும் திசைக்கு வழிகாட்டியுள்ளது. புதிய யுகத்தில் சீனாவின் பல்வேறு தேசிய இன மக்கள் கட்சியின் தலைமையில் சீனத் தனிச்சிறப்பியல்புடைய சோஷலிச லட்சியத்தில் ஊன்றி நிற்பதற்கு அரசியல் அறிக்கை மற்றும் செயல் பணித்திட்டமாக இம்மாநாடு திகழ்கிறது என்றார்.

மேலும், கடந்த 10 ஆண்டுகள், கட்சி மற்றும் நாட்டின் வளர்ச்சிப் போக்கிற்கு மிகச் சிறப்பான காலமாகும். இக்காலத்தில், கட்சி மற்றும் நாட்டின் லட்சியம் பெரும் முன்னேற்றத்தை எட்டி, பல சாதனைகளைப் பெற்றுள்ளது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18வது தேசிய மாநாடு முதல் இதுவரை, கட்சியின் மத்தியக் கமிட்டி உருவாக்கிய அரசியல் கோட்பாடுகள் மற்றும் திட்டப்பணிகள் முற்றிலும் சரியானவை. சீனத் தனிச்சிறப்புடைய சோஷலிச பாதை சீன நிலைமைக்குப் பொருந்தி, சீன மக்களின் விருப்பத்தை வெளிப்படுத்தி, கால வளர்ச்சிக்கு ஏற்றது என்பதை நடைமுறைகள் நிரூபித்துள்ளன என்று ஷி ச்சின்பிங் சுட்டிக்காட்டினார்.

மேலும், புதிய யுகத்தில், சீன பாணி நவீனமயமாக்கத்தை கட்சி வெற்றிகரமாக முன்னேற்றி விரிவுபடுத்தியுள்ளது. இந்நவீனமயமாக்கம், சீனாவின் நிலைமைக்குப் பொருந்தியதாக உள்ளது. தவிரவும், ஒற்றுமை மற்றும் முயற்சியுடன் வெற்றி பெற முடியும். கட்சியின் 18வது தேசிய மாநாட்டுக்கு பிறகு, நமது கட்சி, பொது மக்களுடன் ஒற்றுமையுடன், பல்வேறு இன்னல்கள் மற்றும் அறைகூவல்களைச் சமாளித்து, அற்புதமான சாதனைகளைப் பெற்றுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.