மக்களின் நல்வாழ்வே சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் விருப்பம்
2022-10-17 11:04:11

வளர்ச்சியில் மக்கள் வாழ்வாதாரத்தை உத்தரவாதம் செய்வதிலும் மேம்படுத்துவதிலும் ஊன்றி நிற்க வேண்டும். அருமையான வாழ்க்கையை உருவாக்க கூட்டு முயற்சிகளை ஊக்குவிக்க வேண்டும். சிறந்த வாழ்க்கைக்கான மக்களின் எதிர்ப்பார்ப்பைத் தொடர்ந்து நனவாக்க வேண்டும் என்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங் தெரிவித்தார். அக்டோபர் 16ஆம் நாள் பெய்ஜிங்கில் துவங்கிய சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாட்டில் 19வது மத்தியக் கமிட்டியின் சார்பில் அவர் அறிக்கையை வழங்கினார்.

நபர்வாரி மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு, 12 ஆயிரத்து 500 அமெரிக்க டாலரை எட்டியதுடன், இடைநிலை வருமானம் பெறுவோரின் எண்ணிக்கை, 40 கோடியைத் தாண்டியுள்ளது. மக்களே முதன்மை மற்றும் உயிர் முதன்மை என்ற கருத்துக்களில் ஊன்றி நின்று, தொற்றுநோய் கட்டுப்படுத்தி, பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியை ஒருங்கிணைப்பதில் முக்கிய சாதனைகளைச் சீனா பெற்றுள்ளது.

உலகின் மிகப்பெரிய கல்வி முறைமை, சமூக காப்புறுதி அமைப்பு, மருத்துவ மற்றும் சுகாதார அமைப்பு ஆகியவை உருவாக்கப்பட்டுள்ளன. மக்களை மையமாகக் கொண்ட வளர்ச்சி சிந்தனையில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி எப்போதும் ஊன்றி நின்று, "மக்கள் நல்ல வாழ்க்கை வாழட்டும்" என்ற வாக்குறுதியைத் தொடர்ந்து நிறைவேற்றி வருகின்றது.

சீன மக்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வதற்காக, ஒரு பெரிய வரைபடம் திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் படி, 2020ஆம் ஆண்டு முதல் 2035ஆம் ஆண்டு வரை, சீனா சோஷலிச நவீனமயமாக்கத்தை அடிப்படையில் நனவாக்கும். 2035ஆம் ஆண்டு முதல் இந்த நூற்றாண்டின் நடுப்பகுதி வரை, சீனா வளம், வலிமை, ஜனநாயகம், நாகரிகம், இணக்கம் மற்றும் அழகு ஆகியவை படைத்த நவீனமயமாக்க சோசலிச வல்லரசாகக் கட்டமைக்கப்படும்.