அடுத்த ஆண்டில் அமெரிக்கப் பொருளாதாரத்தின் வீழ்ச்சி
2022-10-17 15:19:48

66 பொருளாதார வல்லுநர்களிடையில் நடத்திய கருத்துக் கணிப்பின் முடிவை அமெரிக்காவின் "வோல் ஸ்ட்ரீட் நாளேடு"  அக்டோபர் 16ஆம் நாள் வெளியிட்டது. அடுத்த ஆண்டு அமெரிக்கப் பொருளாதாரம் மந்தநிலையில் விழும் என்று வல்லுனர்களில் 63 விழுக்காட்டு பேர் கருத்து தெரிவித்தனர்.

மேலும், அமெரிக்க தொழிலாளர் துறை 13ஆம் நாள் வெளியிட்ட தகவல்களின் படி, செப்டம்பரில் அமெரிக்க நுகர்வோர் விலைக் குறியீடு (சிபிஐ) கடந்த மாதத்தை விட 0.4 விழுக்காடு அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டு செப்டம்பரை விட 8.2 விழுக்காடு அதிகமாகும். பணவீக்க தரவு எதிர்பார்ப்புகளை மீறியது. அமெரிக்க பொருளாதாரம் மந்தநிலைக்குத் தள்ளும் அபாயமும் அதிகரித்துவுள்ளது என்று கருதப்படுகின்றது.