2022 உலக சுகாதார உச்சிமாநாடு துவக்கம்
2022-10-17 14:45:00

2022ஆம் ஆண்டு உலக சுகாதார உச்சிமாநாடு 16ஆம் நாள் ஜெர்மனியின் தலைநகர் பெர்லின்னில் துவங்கியது. ஐ.நா பொது செயலாளர் குட்ரேஸ், உலக சுகாதார அமைப்பின் பொது இயக்குநர் டெட்ரோஸ், ஐ.நா குழந்தை நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கேத்தரின் ரஸ்ஸல், ஜெர்மனித் தலைமை அமைச்சர் ஸ்கோல்ஸ் முதலியோர் காணொலி வழியாக 3 நாட்கள் நீடிக்கும் இவ்வுச்சிமாநாட்டின் துவக்க விழாவில் பங்கேற்றனர்.

சுகாதார துறையில் பன்னாடுகளின் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டுமென நடப்பு உச்சிமாநாட்டின் தலைவர் வேண்டுகோள் விடுத்தார். காலநிலை மாற்றம் மற்றும் ஆரோக்கியம், தொற்றுநோய் தடுப்புக்கான கொள்கை, தொடரவல்ல உலக சுகாதார அமைப்பு முறையின் உருவாக்கம் உள்ளிட்ட அம்சங்கள் இதில் முக்கியமாக விவாதிக்கப்பட்டு வருகின்றன. அறிவியல், வணிகத் துறை மற்றும் அரசு சாரா அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 6000 பிரதிநிதிகள் அதில் கலந்து கொண்டனர்.